மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சகோதரி மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் இன்று காலமானார்.
உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் இன்று காலமானதாகவும் அவரது இறுதிச் சடங்குகள் நாளை மதுரை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணராக பணியாற்றி, மருத்துவத் துறையில் மகத்தான சேவையாற்றி வந்த மருத்துவர் விஜயலட்சுமி, சென்னையில் வாழ்ந்துவந்தார்.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளால் அவர் இன்று காலமானதாகவும் செப்டம்பர் 10ஆம் தேதி புதன்கிழமை மதுரையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.