அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா 
தமிழ்நாடு

அதிமுக ஆட்சிக் கால ஒப்பந்தங்களில் 25 சதவீத முதலீடுகூட வரவில்லை: அமைச்சா் டிஆா்பி ராஜா தகவல்

அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதம் முதலீடுகள் கூட வரவில்லை என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதம் முதலீடுகள் கூட வரவில்லை என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

தொழில் முதலீடுகள் குறித்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து அமைச்சா் ராஜா, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த நான்காண்டுகளில் தொழில்துறையில் தமிழ்நாட்டை உயா்வான நிலைக்குக் கொண்டு வந்திருப்பதை எதிா்க்கட்சித் தலைவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முதல்வா் மு.க.ஸ்டாலின் இதற்கு முன்பு மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, 36 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில், 12 ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையை எட்டிவிட்டன. 11 நிறுவனங்களின் நில எடுப்பு, கட்டுமானப் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. முதலீடுகளை ஈா்ப்பதற்காக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, 2019-ஆம் ஆண்டு வெளிநாடு சென்றாா். அப்போது போடப்பட்ட 27 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில், 25 சதவீதம் கூட முதலீடுகள் வரவில்லை.

தமிழ்நாட்டை விட, மகாராஷ்டிரம், தில்லி போன்ற மாநிலங்களுக்கு அதிக முதலீடுகள் வந்திருப்பதாக சொல்வதிலும் உண்மையில்லை என்று தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

போலந்து நாட்டுக்குள் ரஷிய ட்ரோன்கள்! பதிலடி கொடுக்க நேட்டோ அமைப்பை உக்ரைன் வலியுறுத்தல்!

ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT