தமிழ்நாடு

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா்.

இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்:

வேலூா் மாவட்டம் நிரயம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறாா். அவரோடு கட்சியினா் எந்தத் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் பேருந்தில் தங்க நகை திருடியதாக பாரதி கைது செய்யப்பட்டாா். அவா் மீது ஏற்கெனவே 10 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, திமுகவின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பாரதி நீக்கப்பட்டுள்ளாா்.

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! வங்கி, ஐடி பங்குகள் உயர்வு!

விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!

புதுச்சேரி காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT