அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கோப்புப் படம்
தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

நான்கு தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை முறையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை முறையை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் முதல் கட்டமாக நான்கு தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல்மருவத்தூர், கன்னியாகுமரி, ஈரோடு, சென்னை ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்துள்ளார்.

இன்று நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மருத்துவமனைக்கு வருவோரை நோயாளிகள் என்று சொல்லாமல், மருத்துவப் பயனாளிகள் என அழைப்பது தொடர்பான அரசாணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்.

2030-க்குள் எய்ட்ஸ் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க ஒருங்கிணைந்து பாடுபட்டு வருகிறோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT