ENS
தமிழ்நாடு

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாள்கள் கடுமையான வெய்யில் இருந்து வந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மாலை பல பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

சென்னை சென்ட்ரல், பாரிமுனை, மெரீனா, கிண்டி, ஆலந்தூர், எழும்பூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Moderate rain at various places in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புன்னகை சிந்தும்... அகிலா!

கேரளத்து பைங்கிளி... நமீதா பிரமோத்!

சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி - புகைப்படங்கள்

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

ஆசிய கோப்பை: பவர் பிளே ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை எட்டி இந்திய அணி அபாரம்!

SCROLL FOR NEXT