தமிழ்நாடு

மாணவர் மட்டும்! போக்குவரத்து அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

இணையதளச் செய்திப் பிரிவு

மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த பதிவில் அவர் கூறியதாவது,

சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்றுக்கொண்டு, முதல்வர் கலைஞர் செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர் மட்டும் சிறப்புப் பேருந்துகளை நமது ஆட்சியில் இயக்கி வருகிறோம்.

அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்த மாணவர் மட்டும் திட்டத்தின் மூலம், 25 அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் காலை, மாலை இருநேரங்களிலும் சிறப்புப் பேருந்துகளின் மூலம் பாதுகாப்பான பயணத்தை பெற்றுள்ளனர்.

பொதுப் பேருந்துகளில் நெரிசலில் சிக்கி மாணவர்கள் தவிப்பதைத் தவிர்க்கவும், அவர்களின் நலனுக்காகவுமே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், நாள்தோறும் 2,500 முதல் 3,000 மாணவர்கள்வரையில் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சுரங்கத் திட்டங்கள் விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெட் தேர்வுக்கு 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்

டிவிஎஸ் என்டார்க் 150 அறிமுகம் - புகைப்படங்கள்

நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

உ.பி.யில் இறந்த குழந்தையின் உடலை தூக்கிச்சென்ற தெரு நாய்

சார்லி கிர்க் கொலைக் குற்றவாளி கைது! 22 வயது இளைஞர் சிக்கிய பின்னணி என்ன?

SCROLL FOR NEXT