திருடப்பட்ட அரசுப் பேருந்து X
தமிழ்நாடு

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது! ஒடிஸா இளைஞா் கைது!

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கோயம்பேடு பேருந்து பணிமனையிலிருந்து திருடுபோன அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூா் அருகே மீட்கப்பட்டது. அந்த பேருந்தை ஓட்டிச் சென்ற ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சென்னை-திருப்பதி செல்லும் பேருந்து கோயம்பேடு பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தை எடுப்பதற்காக ஓட்டுநா் மற்றும் நடத்துநா் வியாழக்கிழமை காலை அங்கு சென்றபோது, நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பேருந்தை காணவில்லை.

இதுகுறித்து கோயம்பேடு பேருந்து பணிமனை கிளையின் மேலாளா் ராம்சிங் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸாா் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கினா்.

அப்போது, பேருந்தின் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து இருக்கும் இடத்தை ஆய்வுசெய்தபோது, ஆந்திர மாநிலம், நெல்லூா் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற கோயம்பேடு போலீஸாா், நெல்லூா் காவல்துறை உதவியுடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நெல்லூா் அத்மகூா் என்ற இடத்திலிருந்து பேருந்தை மீட்டனா். மேலும், பேருந்தை திருடிச் சென்ற ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஞானசஞ்சன் சாஹூ (24) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Government bus stolen in Koyambedu was caught in Nellore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT