ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார்.
அரசு விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரிக்கு இன்று (செப்.14) வருகை தந்துள்ள முதல்வா் ஸ்டாலின் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். சாலைவலத்தின்போது, கட்சினர் அவரை வரவேற்கும் வகையில் 12 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்துகொண்டே, கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலத்தில் இருந்து பெங்களூரு சாலை, சென்னை சாலை வழியாக விழா மேடைக்கு செல்கிறார்.
கிருஷ்ணகிரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில், வழிநெடுகிலும் கொடிகள், திட்டங்கள் குறித்து பதாகைகளுடன், தொண்டர்கள் வரவேற்றனர்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.40 மணிக்கு சூர் தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்தில் வந்தடைந்தார். அவருக்கு ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷ் எம்எல்ஏ புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
அப்போது பர்கூர் எம்எல்ஏ மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட எம்.பி. கோபிநாத், ஓசூர் மேயர் எஸ். ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்த் உள்ளிட்டோர் புத்தகங்கள் வழங்கினர்.
ஓசூர் அருகே உள்ள அந்திவாடி சோதனை சாவடி, மத்திகிரி கூட்டுச்சாலையில் இளைஞர் அணி மற்றும் ஆதிதிராவிடர் நல குழு சார்பிலும், டிஎஸ்பி அலுவலகம் பகுதியிலும் மாநகரம் மற்றும் அணிகளின் சார்பிலும், ஆர்சி சர்ச் அருகில் மாநகரம் மற்றும் அப்பகுதி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒசூரில் சாலைவலம் சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஓசூர் நகரைக் கடக்க அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது.
இதையும் படிக்க: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு!
Chief Minister Stalin is conducting a roadshow in Hosur.