மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 16) மாலை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிடோரையும் இபிஎஸ் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, எடப்பாடி கே.பழனிசாமி, தில்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி. முனுசாமி, தங்கமணி உள்ளிட்டோர் தில்லி சென்றுள்ளனர்.
தில்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், தனபால், இன்பதுரை ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவா்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் விடுத்திருந்த கெடுவும் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.