பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின். (கோப்புப்படம்)
தமிழ்நாடு

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

பெரியார் தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாள் தினத்தை 'சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டில் அறிவித்திருந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தவும் அரசியல் கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனுடன் செய்யறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விடியோ ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பெரியாரை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கி அவரது போராட்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் அந்த விடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

Periyar, the rational light for the rise of the Tamil nation! - Chief Minister Stalin praises

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

SCROLL FOR NEXT