முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 17 செப்டம்பர், 2025 at 11:03 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, செப். 17ல் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 28 districts, including Chennai, for the next 3 hours.

முழு கட்டுரையைப் படிக்க →