சென்னையில் கடந்த ஒரு சில நாள்களாகவே பலத்த மழை பகலிலும், இரவிலும் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அதுபோன்று இப்போது தொடங்கிய மழை இருக்காது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் மெல்ல மழைத் தொடங்கி பரவலாக பெய்துள்ளது. ஆனால், அந்த மழைப் போல இல்லாமல், இன்று மாலை தொடங்கியிருக்கும் மழை இரவு வரை நீடிக்காமல் சில மணி நேரத்தில் விட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை தயாரா என்று கேள்வியோடு தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் மழை நிலவரத்தை முன்கூட்டியே கணித்துக் கூறி வரும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை தயாரா?
இடியுடன் மழைக்கு மேகக் கூட்டங்கள் சென்னையை நெருங்கி விட்டன. வழக்கமாக, சென்னைக்கான மழை அறிகுறி முதலில் தென்படுவது ஆவடியில்தான்.
அடுத்து அம்பத்தூர். இதனைத் தொடர்ந்துதான், சென்னை நகரின் பிற பகுதிகளுக்கு மழை தொடங்கும்.
கடந்த இரண்டு நாள்களைப் போல அல்லாமல், இன்று பெய்யும் மழை பலத்த மழையாக இருக்காது. நகரின் சில பகுதிகளில் மழை இல்லாமலும் இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பரவலாக மழை
ஆவடி, திருநின்றவூர் என பலத்த மழை பெய்து வரும் நிலையில், சென்னையில், அம்பத்தூர், மாங்காடு, கேகே நகர், காட்டுப்பாக்கம், நெற்குன்றம், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி, அயப்பாக்கம், அனகாபுத்தூர் என பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க... செப். 21 சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாதது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.