தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் வீட்டுக்குள் அத்துமீறி இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய்யின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவருக்கு மத்திய அரசு சார்பில் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள விஜய்யின் மொட்டை மாடிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனைத்து பாதுகாப்புகளையும் மீறி இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.
நேற்று மாலை விஜய் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக மொட்டை மாடிக்கு சென்றபோது அந்த இளைஞரை பார்த்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக, அவரை நீலாங்கரை காவல்துறையினரிடம் விஜய் வீட்டின் காவலர்கள் ஒப்படைத்தனர்.
அந்த இளைஞர் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக மனநலன் பாதிக்கப்பட்டுள்ள அவர், சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை கீழ்ப்பாக்கம் மனநலன் மருத்துவமனையில் அந்த இளைஞரை காவல்துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், மத்திய ஆயுதப் படையின் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய்யின் வீட்டு மாடிக்குச் சென்ற இளைஞர், நீண்ட நேரம் அமர்ந்திருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.