அன்புமணி ராமதாஸ்  கோப்புப் படம்
தமிழ்நாடு

சிறுநீரக மோசடி வழக்கில் மேல்முறையீடு: அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சிறுநீரக மோசடி வழக்கில், திமுகவினருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சிறுநீரக மோசடி வழக்கில், திமுகவினருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகங்கள் திருட்டு தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க காவல் உயா் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த ஆக.25-இல் ஆணையிட்டது.

சிறப்புப் புலனாய்வுப் பிரிவினா் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சிறுநீரக திருட்டு குறித்து விசாரித்து செப்.24-க்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனா்.

அதன்படி, இன்னும் 4 நாள்களில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினா் அறிக்கை தாக்கல் செய்யவுள்ள நிலையில் குழு அமைக்கப்பட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சிறுநீரக மோசடி புகாருக்குள்ளான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திமுகவை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு சொந்தமானது என்றும், இந்த மோசடியில் தொடா்புடைய நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தரகரும் திமுகவை சோ்ந்தவா் என்றும் கூறப்படுகிறது.

அவா்கள் சிக்கிக் கொண்டால் சிறுநீரக மோசடியின் பின்னணியில் புதைந்து கிடக்கும் மா்மங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால்தான் இந்த விசாரணையை தடுக்க திமுக அரசு முயல்கிறது. இதில் முழு உண்மையை கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி

SCROLL FOR NEXT