நடிகை ராதிகா தாய் கீதா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
நடிகை ராதிகாவின் தாய் கீதா ராதா காலமானார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும் நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா (86) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.
அவரது உடல், இறுதி மரியாதை செலுத்துவதற்காக போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயஸ் கார்டனில் வைக்கப்பட்டிருக்கும் கீதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்துக்கு நேரடியாக வந்து, கீதா ராதாவுக்கு மரியாதை செலுத்தியதுடன், உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.