மதுரையில் பறவைக் கூண்டுக்குள் புகுந்த நாகப் பாம்பு, 3 மூன்று பறவைகளை விழுங்கியுள்ளது. இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மதுரை பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகளான லவ் பேர்ட்ஸ், குருவி வகைகளை தனது வீட்டு மொட்டை மாடியில் கூண்டு அமைத்து வளர்த்து வருகிறார்.
பறவைகளுக்கு உணவளிப்பதற்காக சென்ற ராஜன், 3 பறவைகள் இறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மற்ற பறவைகளும் பயந்த நிலையில் இருப்பதைக் கண்டு உள்ளே பார்த்தபோது, நாகப் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதைக் கண்டதும், விலங்கு நல ஆர்வலரான ஸ்நேக் பாபுவுக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த ஸ்நேக் பாபு, பறவைகளைக் கொன்றது, மூன்றரை அடி நாகப் பாம்பு வகையைச் சேர்ந்த பொறிநாகம் என்பதைக் கண்டறிந்தார். நாகப் பாம்பைப் பிடித்து, புதுக்கோட்டை பகுதியில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.