தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். அங்கு, புதிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று(செப். 23) சந்திக்கிறார்.
நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் (67) கடந்த செப். 12-ல் பதவியேற்றார்.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லி சென்றுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று மாலை சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்திக்கவுள்ளார்.
மேலும் ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மற்றும் பிரதமா் மோடியை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக ஆளுநரின் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.