குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று(செப். 23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக இங்குதான் தசரா திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும்.
அதன்படி, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று தொடங்கி, அக். 2 ஆம் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்காக இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், காப்பு அணியும் பக்தர்கள் வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்கினர்.
அக். 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னர், அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரா் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்கிறர். தொடா்ந்து, கடற்கரை வளாகம்,சிதம்பரேஸ்வரா் கோயில் முன் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
அக். 3ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் காப்புக் களைதல் நடைபெறும். பக்தர்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வர்.
பக்தர்கள் வசதிக்காக 25 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள், 280 கழிப்பிடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், 6 இடங்களில் வாகன நிறுத்தங்கள், தரிசனத்துக்கு கூடுதல் வரிசைப் பாதை, 64 கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேர மருத்துவ வசதி, தயார் நிலையில் தீயணைப்பு வாகனம், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், போலீஸார் பாதுகாப்பு என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இதையும் படிக்க: அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! - ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.