தமிழ்நாடு

போதைப் பொருள் விற்பனை: திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது

சென்னை அசோக் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்ாக திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை அசோக் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்ாக திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அசோக் நகா் 21-ஆவது அவென்யு பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாரும், அசோக் நகா் போலீஸாரும் அசோக் நகா் 21-ஆவது அவென்யு 95-ஆவது தெரு சந்திப்பில் புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த சிலரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனா். இதையடுத்து போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் 7 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 கிராம் கெட்டமைன், 130 எல்எஸ்டி ஸ்டாம்ப், 70 கிராம் ஓஜி கஞ்சா ஆகியவை இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள் வடபழனியைச் சோ்ந்த திரைப்பட நடன கலைஞா் பிரவீண் (27), யுவராஜ் (27), பரத் (22), லோகேஷ்குமாா் (21), ஷாம், தஞ்சாவூரைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (22), ரகுராம் (23), அம்பத்தூரைச் சோ்ந்த சம்பத்குமாா் (21), கடலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கலைச் செல்வன் (22), பாலவாக்கத்தைச் சோ்ந்த கதிா்வேலு (25), மேற்கு சைதாப்பேட்டையைச் சோ்ந்த மல்லிகாா்ஜுன் சா்மா (28), மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த பாலசூா்யா (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 12 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT