வருகிற அக். 12 ஆம் தேதி மதுரையில் இருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"வருகிற அக். 6 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வருகிறார். சென்னை எம்ஜிஆர் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். தில்லி பயணத்தின்போது அவரது பயணம் குறித்து அவரிடம் பேசினேன்.
வருகிற அக். 12 ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் இருந்து தேர்தல் பிரசாரம் தொடங்கப்படவுள்ளது. அதில் கூட்டணியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.
டிடிவி தினகரனுடனான சந்திப்பு நட்புரீதியானது என்று அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருக்கிறார்" என்றார்.
பாஜகவுக்கு நீங்கள் தலைவரா? அண்ணாமலை தலைவரா? என்ற கேள்விக்கு, 'இந்த கேள்வி எங்களுக்குள் சண்டை மூட்டிவிடுவது போல இருக்கிறது' என்று கூறினார்.
இதனிடையே, நயினார் நாகேந்திரன் தில்லியில் ஜெ.பி. நட்டாவுடன் சந்திப்பு மேற்கொண்டபோது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுமாறு ஜெ.பி. நட்டா அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.