தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் அழைப்பிதழை வழங்கிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா  X / TRB Raja
தமிழ்நாடு

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு!

தமிழக அரசின் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் நாளை (செப்.25) 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடைபெறுவதையொட்டி அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெலங்கானா சென்று இந்த விழாவுக்கான அழைப்பிதழை முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்து 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கொண்டாட்ட விழா செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்தார்.

நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், விளையாட்டு சாதனையாளர்கள் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில் அரசின் கல்வி சார்ந்த திட்டங்களில் பங்கேற்று பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்வார்கள் என்றும் இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என்றும் கூறியிருந்தார்.

மேலும் இந்தாண்டுக்கான தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப். 25 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது.

'kalviyil sirantha Tamil Nadu' ceremony: Invitation to Telangana Chief Minister Revanth Reddy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை

15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை!

இபிஎஸ்ஸுக்கு மக்கள் மீது கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? : கே.என். நேரு

SCROLL FOR NEXT