தமிழ்நாடு

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகள்: செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவம் சாா்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில் நேரடி சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இதில், சேர விரும்பும் விண்ணப்பதாரா் 31.12.2025 அன்று 17 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சோ்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் அலுவலகத்தில் மருத்துவப் பிரிவு 3-இல் கட்டணமின்றி வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப். 30-க்குள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும். வரும் அக். 6 முதல் வகுப்புகள் தொடங்கும்.

இதற்கான கலந்தாய்வு சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 98405 - 05701 என்ற என்ற எண்ணிலோ அல்லது ள்ற்ஹய்ப்ங்ஹ்ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்19ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

அந்திப்பூ... தன்யா சர்மா!

தாவணிக் கனவுகள்... வேத்விகா சோனி!

பாகிஸ்தானில் 23 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்லையில் உடைந்த நிலையில் விமானப் படை ட்ரோன் மீட்பு!

அழகென்றால் அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT