தமிழ்நாடு

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்? -ஓ. பன்னீர்செல்வம் பளிச் பதில்!

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்? ஓபிஎஸ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் பதிலளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள, அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராக விளங்கிய ஓ. பன்னீர் செல்வத்திடம், ’தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று செய்தியாளர்கள் இன்று(செப். 24) கேள்வியெழுப்பினர்.

அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

டிடிவி தினகரன் சொன்ன பதிலையே நானும் பிரதிபலிக்கிறேன். அவர் சொன்னதே சரி” என்றார்.

முன்னதாக, செய்தியாளர்களுடன் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என உறுதிபடத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

O. Panneerselvam says, cannot accept Edappadi Palaniswami as the CM candidate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தான்குளம் கோயில்களில் நவராத்திரி கொலு

சாத்தான்குளம் அருகே இளம்பெண் தற்கொலை

விளையாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினா் தோ்வு

சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி: போக்குவரத்துப் பாதிப்பு

162 பவுன் நகை மோசடி: தனியாா் வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது

SCROLL FOR NEXT