வேலூர்: வெலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தந்தை மீது மிளகாய் பொடி தூவிவிட்டு, அவரிடமிருந்த 4 வயது குழந்தையை கடத்தல்காரர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளி சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய 4 வயது குழந்தையை, அடையாளம் தெரியாத நபர்கள், காரில் கடத்திச் சென்றுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சாலையில் காரை நிறுத்திவிட்டு வந்த கடத்தல்காரர்கள், தந்தை மீது மிளகாய் பொடியைத் தூவிவிட்டு, அவரிடமிருந்த குழந்தையை காரில் கடத்திச் சென்றனர்.
கர்நாடக மாநில பதிவின் கொண்ட அந்த வெள்ளை நிற சொகுசு காரில் குழந்தை கடத்தப்படுவதைக் கண்டு தந்தை வேணு பதறிபோய் கூச்சலிட்ட நிலையில் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து சென்றுள்ளது.
கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்த நபர்கள் யார் என்பது குறித்தும், குழந்தை குறித்தும் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
குழந்தைக் காப்பாற்ற ஓடிச் சென்ற தந்தையை, காருடன் இழுத்துச் சென்ற கொள்ளையர்களின் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடத்தல்காரர்கள் வந்த காரின் பதிவு எண் போலியானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.