வாழ்க்கையில் வெற்றிபெற படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
சென்னையில் நடைபெறும் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ``உலகத்திலேயே பெரிய செல்வம் - கல்வி. என் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு, பள்ளிசென்று படித்ததால் மட்டுமே, என்னால் 3 வேளை சாப்பிட்டு பள்ளிசென்று படிக்க முடிந்தது.
என் அப்பா நடந்து பள்ளிக்குச் சென்றதால்தான், என்னால் ஆட்டோ, ரிக்ஷா, ரயிலில் செல்ல முடிந்தது. ஒரு தலைமுறையில் ஒருத்தர் நன்றாகப் படித்தால், அதற்கு அடுத்த தலைமுறைகள் நன்றாக இருக்கும்.
ஒரு டிகிரி வாங்கிய என் அப்பா, என்னை 2 டிகிரி வாங்க வைத்தார். என் அக்கா 3 டிகிரி முடித்துள்ளார்.
சினிமா துறையில் ஏதேனும் சவால் வந்தாலும், எனக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை - என்னிடம் உள்ள 2 டிகிரி மட்டுமே. அதை வைத்துக்கொண்டு என்னால் பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைதான்.
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்றால், படியுங்கள். மதிப்பெண்ணுக்காகக் கொஞ்சம் படிங்கள்; வாழ்க்கைக்காகக் கொஞ்சம் படிங்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பாமகவில் இருதரப்பு இல்லை: ராமதாஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.