ஏர் இந்தியா விமானம்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது?

சென்னையில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், நேற்றிரவு தரையிறங்க முடியாமல் 30 நிமிடங்கள் வட்டமடித்த பின்னர், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

இந்த விமானம் சென்னையில் தரையிறங்காமல் வட்டமடித்ததற்கான காரணத்தை அதிகாரிகள் வெளியிடாததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

தில்லியில் இருந்து புதன்கிழமை மாலை 6 மணியளவில் 152 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு ஏர் இந்தியாவின் விமானம் புறப்பட்டுள்ளது.

இந்த விமானம் நேற்றிரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் அருகே வந்த நிலையில், தரையிறங்காமல் சுமார் 30 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. மீண்டும் பெங்களூருவில் இருந்து நள்ளிரவு 11.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

இதையடுத்து, சென்னையில் இருந்து நேற்றிரவு 9.40 மணியளவில் தில்லிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம், சுமார் 4 மணிநேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணியளவில் 160 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.

இதனால், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 300 -க்கும் அதிகமான பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

முதலில் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூரு சென்று தரை இயங்கியது ஏன்? என்ற கேள்விக்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்காததால் பயணிகள் குழப்பத்துக்குள்ளாகினர்.

Air India flight circled for 30 minutes without landing in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 5-ல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

ரணகளம்... முதல்வரின் ஏஐ விடியோவை பகிர்ந்த உதயநிதி!

ஆட்ட நாயகனான மெஸ்ஸி: இன்டர் மியாமி பிளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி!

ஆத்திரமூட்டும் செயல்கள்... பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்!

SCROLL FOR NEXT