கோவையில், ஈச்சர் வாகனம் மோதியதில் தெற்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர் ரோடு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சரவணா பார்க்கிங் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாரவிதமாக எதிரே வந்த அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வாளர் பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் கூராய்வுக்காக பானுமதி உடல் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வாளர் பானுமதி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.