கடந்த ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்கள், உதவியாளா்கள், வனக் காவலா், வனக் காப்பாளா்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்தஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. 13 லட்சம் பேர் வரையில் விண்ணப்பித்திருந்த நிலையில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 போ் தோ்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்திருந்தார். அதன்படி விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வின் மூலமாக 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில் 727 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.