கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலியானது தொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தவெக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.