கரூர் துயரச்சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒருநபர் விசாரணை தொடங்கியது.
அப்பகுதி மக்களிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் என்ன நடந்ததென அவர் விசாரணை மேற்கொள்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைய தலைவராக இருந்தவர்தான் அருணா ஜெகதீசன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தபடி கூட்டம் அலைமோதியது. இதில் கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் சம்பவ இடத்திலேயே நேற்று பலியாகினர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிசைப் பெற்று வருகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவியில் அனுமதிக்கப்பட்டிருந்த கவின்(31) என்பவர் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பலியானார். இந்நிகழ்வு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைத்து முதலவர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.
இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இந்த துயரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
A one-man trial by retired judge Aruna Jagadeesan has begun its trail in Velusamypuram, where the Karur tragedy took place.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.