அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தெரிவித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்க்ள் எண்ணிக்கை இதுவரை 40-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கரூரில் இன்று(செப். 28) செய்தியாளர்களுடன் பேசிய அவர், “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் 220 பேர், செவிலியர்கள் 115 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேலும், நாமக்கல், சேலம், திண்டுக்கல் திருச்சி, மதுரை, கோவையில் இருந்தும் 114 மருத்துவர்களும் 23 செவிலியர்களும் கரூர் வந்து சிகிச்சை அளித்தனர். தனியார் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சையில் உள்ளனர். அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு விரைந்து உடற்கூராய்வு செய்யப்பட்டு அவர்தம் உடல்கள் உரிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.