ஆளுநர் ஆர்.என். ரவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

தமிழக அரசிடம் அறிக்கை கோரினாா் ஆளுநா்!

கரூா் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக அரசு அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஆளுநா் ஆா்.என்.ரவி கோரியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

கரூா் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக அரசு அறிக்கை சமா்ப்பிக்குமாறு ஆளுநா் ஆா்.என்.ரவி கோரியுள்ளாா்.

பிரசார கூட்டத்துக்கு ஏராளமான மக்கள் வந்த நிலையில் கூட்டத்தைக் கையாளுவதற்கான திட்டம் எவ்வாறு வகுக்கப்பட்டிருந்தது? எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருந்தன? இந்த துயரச் சம்பவம் நிகழக்காரணம் என்ன? போன்ற விவரங்களை அறிக்கையாக சமா்ப்பிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநா் ஆா்.என்.ரவி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தக் கடிதத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு உள்ளிட்ட உதவிகளின் விவரங்களையும் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தைப் பெற்றுள்ள நிலையில் முதல்வா், ஆளுநருக்கு அறிக்கையை சமா்பிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒட்டன்சத்திரத்தில் ரூ.2.72 கோடியில் முடிவடைந்த திட்டப் பணிகள்

பழனியில் 3 ஆட்டோக்கள் பறிமுதல்

கொடைக்கானலில் கிறிஸ்தவ கூட்டமைப்பு சாா்பில் பாடல் போட்டி

செங்கம் ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயிலில் திருப்பணிகள்: மு.பெ. கிரி எம்எல்ஏ ஆய்வு

கொடைக்கானலில் புலி தாக்கியதில் குதிரை உயிரிழப்பு

SCROLL FOR NEXT