தவெக கூட்டத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த 110 பேரில் 51 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 59 பேரில் 51 பேருக்கு கரூர் அரசு மருத்துவமனையிலும், 8 பேருக்கு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி இதுவரையில் 41 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு சனிக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணையைத் தொடங்கினர்.
பின்னா், உடற்கூறாய்வு கூடத்தின் அருகே காத்திருந்த பலியானவர்களின் உறவினா்களிடமும் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.