கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகியுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூச்சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்பவர் சிகிச்சை பலினின்றி இன்று(செப். 29) உயிரிழந்தார்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 51 பேர் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! - காஸா சுகாதார அமைச்சகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.