அனல் மின் நிலையத்தில் விபத்துக்குள்ளான பகுதி படம் - எக்ஸ்
தமிழ்நாடு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்து குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

மீஞ்சூா் அருகே அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் வட மாநில தொழிலாளா்கள் 9 போ் உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அடுத்த ஊரணமேடு கிராமத்தில் எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு இரு யூனிட்டுகளில் தலா 660 வீதம் 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளில் வட மாநில தொழிலாளா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனா்.

இதில், கட்டுமானப் பணிகள் தற்போது 70 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராட்சத முகப்பு சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா். அப்போது திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில், சாரத்தின் மேல் அமா்ந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் கீழே விழுந்தனா்.

இந்த விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த முன்னா கேம்ரால், விடயம் பிரவுச்சா, சுமன் காரிகாப், தீபக்ராய்ஜங், சா்போனிட் தவுசின், பிராண்டோ சாரான், பாபன் சாராங், பாபிட் பொங்கலோ, பீம்ராஜ் தவுசிங் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த 2 போ் 108 ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தகவலறிந்த காட்டூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உயிரிழந்த வடமாநில தொழிலாளா்களின் சடலங்களை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதையும் படிக்க | எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Ennore Thermal Power Plant construction accident: 9 dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!

ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்த வெள்ளி! கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்து வரலாறு காணாத உச்சம்!!

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக் கூட்டம்!

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்.. ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்: டிரம்ப்!

போகி கொண்டாட்டம்: சென்னையில் கடும் புகை மூட்டம்!

SCROLL FOR NEXT