கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது மின் தடை ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பல புகார்களை ஆதாரத்துடன் அரசுத் தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நடந்த சம்பவங்களின் விடியோக்களைத் தொகுத்து, அவற்றை ஆதாரமாகக் கொண்டு தவெக அளித்த புகார்களை அரசு மறுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தரப்பிலிருந்து முதன்மைச் செயலாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,
கரூரில் தவெக தலைவர் விஜய் பேசும்போது மின்தடை ஏற்படவில்லை என கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஃபோகஸ் லைட் அணைக்கப்பட்டதாகவும் ஜெனரேட்டர் பகுதிக்குள் தொண்டர்கள் நுழைந்ததால் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
கட்சியின் தலைவர் விஜய் வரும்போது பின்தொடர்ந்த கூட்டமும், ஏற்கெனவே காத்திருந்த கூட்டமும் சேர்ந்து நெரிசல் ஏற்பட்டதாகவும், காவலர்கள் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டவில்லை எனவும் தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி வந்தது ஏன்?
தவெக கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி வந்தது ஏன் என்பது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் செந்தில் குமார் விளக்கினார். ஆம்புலன்ஸ் அழைப்பு வந்த நேரத்தை குறிப்பிட்டு இதனை விளக்கினார்.
அரசு ஆம்புலன்ஸ்கள் அருகருகே 6 நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகவும், அடுத்தடுத்து அழைப்புகள் வரவும், ஆம்புலன்ஸ்கள் மேலும் அரசுத் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
கட்சி சார்பிலும் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்று அவற்றையும் அரசு அதிகாரிகள் குறிப்பிட்டு விளக்கினர்.
7 ஆம்புலன்ஸ்கள் கட்சி சார்பில் இருந்ததாகக் குறிப்பிட்ட அமுதா ஐஏஎஸ், சம்பவம் நடந்த பிறகுதான் ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்குள் வந்ததாக விளக்கினார்.
முதல் அழைப்பு 7.15 மணிக்கு வந்த நிலையில், 2ஆம் முறைு 7.23 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது.
இரவு 7.45 முதல் 9.45 வரை அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
இரவிலேயே உடற்கூராய்வு ஏன்?
கரூர் மருத்துவமனையில் 28 உடல்களைக் கையாளும் திறன் மட்டுமே இருந்ததாக சுகாதாரத் துறை செயலாளர் குறிப்பிட்டார்.
இடவசதி இல்லாதது, சீக்கிரம் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், இறந்தவர்களின் உடல்களை உடனே தரும்படி உறவினர்கள் கோரியதால் இறவிலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | கரூர் பலி: திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.