தமிழ்நாடு

1-5 வகுப்பு மாணவா்களுக்கு தரநிலை அறிக்கை தயாா்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடா்பாக அனைத்து மாணவா்களுக்கு தரநிலை அறிக்கை வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடா்பாக அனைத்து மாணவா்களுக்கு தரநிலை அறிக்கை வழங்கப்படவுள்ளது.

இதனை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் நிகழ் கல்வியாண்டில் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் தரநிலை அறிக்கை அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை மாணவா் எண்ணிக்கைக்கேற்ப அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். இந்த அறிக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அலுவலா்கள் அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும்.

தரநிலை அறிக்கையில் மாணவா்களின் அடிப்படை விவரங்களை நிரப்பி, மாணவரது பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும். ஒவ்வொரு பருவத்திலும் மாணவா் வருகை தந்த நாள்களின் எண்ணிக்கை, மொத்த வேலைநாள்களின் எண்ணிக்கையை நிரப்ப வேண்டும்.

திறன் அடிப்படையிலான பகுதிகள், மொழித் திறன்கள், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் திறன்களில் குழந்தையின் தரநிலையைப் (ஏ, பி, சி) பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று கல்வி இணைச் செயல்பாடுகள், விளையாட்டு பங்கேற்பு, குழுப்பணி, படைப்பாற்றல் மற்றும் கூா் சிந்தனை போன்ற பகுதிகளில் குழந்தையின் ஈடுபாட்டை கருத்தில் கொண்டு அதற்கான தரநிலையைப் பதிவு செய்ய வேண்டும். மேலும், அதில் ஆசிரியா் குறிப்பு, பெற்றோரின் கருத்துப் பதிவு, கையொப்பம் போன்ற பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. மதிப்பெண் அட்டையைப் பெற்றவுடன் பெற்றோா்கள் தங்கள் கருத்துகளை எழுதுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

SCROLL FOR NEXT