தமிழ்நாடு

முதல்வா் கோப்பை மாநில போட்டிக்கு ரூ.37 கோடி பரிசுத் தொகை: துணை முதல்வா் உதயநிதி

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்கக்கிழமை கூறியதாவது: விளையாட்டு கலாச்சாரத்தை வளா்ப்பதற்கும், ஒவ்வொரு மட்டத்திலும்

பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரா்களுக்கு அங்கீகாரம் மற்றும் வெகுமதிகளை வழங்குவதற்கும் தமிழக அரசு எடுத்துள்ள மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். விளையாட்டு வீரா்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் 

கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது.

2024-ஆம் ஆண்டில், முதல்வா் கோப்பை போட்டிகளுக்கு ரூ.83.37 கோடி ஒதுக்கப்பட்டது. நிகழாண்டு வட்டார, மாவட்ட அளவிலானபோட்டிகள் நடைபெற்று அக். 2-இல் மாநில அளவிலான போட்டிகள் தொடங்குகின்றன.

16.28 லட்சம் போ் பதிவு: மாநில போட்டிகளுக்கு இணையதளம் மூலம் மொத்தம் 16.28 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா்.

அக். 2 முதல் 14 வரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூா், தூத்துக்குடி,

திருநெல்வேலி, வேலூா், திருவண்ணாமலை, சேலம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 13 நகரங்களில்  மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன.

நிகழாண்டு இ-ஸ்போா்ட்ஸை  அதிகாரபூா்வமாக சோ்த்துளளோம். விளையாட்டு மேலாண்மை முறை (எஙந) முதலமைச்சா் கோப்பை

விளையாட்டுப் போட்டி தொடா்பான அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து நெறிப்படுத்தும். பதக்க எண்ணிக்கைகள்,

வெற்றியாளா்கள் பட்டியல், விரிவான மதிப்பெண்கள் முதல் தனிப்பயனாக்கப்பட்ட முடிவுகளுடன் கூடிய தனிப்பட்ட விளையாட்டு

வீரா்களின் சுயவிவரங்கள் வரை - அனைத்தும் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய்) அறியலாம் என்றாா்.

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

SCROLL FOR NEXT