முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்! ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் பற்றி...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:36 AM
செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகி விஜயனுக்கு சீட் வழங்க வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சேவாதள காங்கிரஸ் தலைவர் விஜயனுக்கும் அதேபோல மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசினா சையத்துக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதனிடையே விஜயனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் நிர்வாகி திருச்சியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கேனில் டீசலுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த நிர்வாகிகள் அவரைத் தடுத்து நிறுத்தி டீசல் கேனை கைப்பற்றினர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 28 ஆம் தேதியை தொகுதிப் பட்டியலை திமுக அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியுள்ள வேட்புமனு தாக்கல் ஏப். 6 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஒரு சில நாள்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்னும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. முன்னதாக தேர்வான பட்டியலுக்கு ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் புதிய பட்டியலைத் தயார் செய்து வருகிறது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்

பொன்னேரி (தனி), திருபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நான்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர்.

summary

Congress executives Stage Protest in Chennai, asks seat to contest in election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.