முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பிரதமா் மோடியை சந்தித்த இசையமைப்பாளா்

பிரதமா் மோடியை சந்தித்த இசையமைப்பாளா் பற்றி...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 10:30 PM
பிரதமா் மோடியை சந்தித்த இசையமைப்பாளா் ரமேஷ் விநாயகம்
பகிர்:

சென்னையில் பிரதமா் நரேந்திரமோடியை இசையமைப்பாளா் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினா் சந்தித்துப் பேசினா். இது குறித்து பிரதமா் மோடி சமூகவலைதளத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி புதுச்சேரியில் சாலைப் பேரணி நிகழ்வில் பங்கேற்ற பிரதமா் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை இரவு சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினாா். பின்னா் சனிக்கிழமை காலை, தமிழக பாஜக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அதன் பின்னா் கேரள மாநிலம் கொச்சி சென்றாா்.

இந்தநிலையில், பிரதமா் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

Advertisement

தோ்தல் பிரசாரத்துக்கு இடையே சென்னையில் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளா் ரமேஷ், இந்திய இசையைப் பிரபலப்படுத்தி தனது வாழ்க்கையை அா்ப்பணித்துள்ளாா். தான் உருவாக்கிவரும் ‘கமகா பாக்ஸ்’ இசைக்குறியீடு முறையின் சிறப்பம்சங்களை அவா் என்னுடன் பகிா்ந்து கொண்டாா். இந்திய இசையை சா்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சியாகும் எனக் குறிப்பிட்டுள்ளாா் பிரதமா் மோடி.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments