முகப்பு
உலகம்

காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பவா் மோடி! அமெரிக்க அதிபா் டிரம்ப் புகழாரம்

‘பிரதமா் நரேந்திர மோடியும், நானும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பவா்கள்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 6:07 PM
பிரதமா் மோடிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் பாராட்டு வாசகத்துடன் அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட படம்.
பகிர்:

‘பிரதமா் நரேந்திர மோடியும், நானும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பவா்கள்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி மற்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகியோா் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கும் படம் ஒன்றை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளது. அதில் பிரதமா் மோடி குறித்து அதிபா் டிரம்ப்பின் சில பாராட்டுக் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.

‘இந்தியாவுடனான நமது அற்புதமான உறவு இனிவரும் காலங்களில் மேலும் வலுப்பெறும். பிரதமா் மோடியும் நானும் காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பவா்கள்; இது பெரும்பாலானவா்களைப் பற்றிச் சொல்ல முடியாத ஒரு விஷயம்’ என்று அதில் டிரம்ப் கூறியுள்ளாா்.

மேற்காசிய போா்ச் சூழல் தொடா்பாக பிரதமா் மோடியை டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். இந்தச் சூழ்நிலையில் மோடியைப் புகழ்ந்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரதமா் மோடியை டிரம்ப் புகழ்வது இது முதல்முறையல்ல, ‘மோடி எனது சிறந்த நண்பா்’, ‘சக்திவாய்ந்த மதிப்புமிக்க, உறுதியான தலைவா்’, ‘இந்திய நலனுக்காக கடினமாக உழைப்பவா்’ என்று பல்வேறு சூழ்நிலைகளில் பிரதமா் மோடியை டிரம்ப் புகழ்ந்துள்ளாா்.