முகப்பு
தமிழ்நாடு

தமிழக பேரவைத் தேர்தலை நடத்த எத்தனை கோடி ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழக பேரவைத் தேர்தலை நடத்த எத்தனை கோடி செலவாகும் என்பது குறித்து அர்ச்சனா பட்நாயக் தகவல்

Updated On : 7 ஏப்ரல் 2026, 1:55 pm IST
தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் 5,938 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. அதுபோலவே, தமிழகம் முழுவதும் 3,302 பதற்றம் நிறைந்த இடங்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில், பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை ரூ.462 கோடி மதிப்புள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.1,302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலை நடத்த ரூ.975 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதுபோலவே, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ரூ.1,009 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் பணிகளுக்காக வரும் 13ஆம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வருவார்கள். இதுவரை 85 வயதுக்கு மேற்பட்ட 2.5 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

summary

Archana Patnaik reveals how many crores will be spent to hold Tamil Nadu Assembly elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.