முகப்பு
தமிழ்நாடு

கோபியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!

செங்கோட்டையனின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 7 ஏப்ரல் 2026, 1:52 pm IST
செங்கோட்டையன் வேட்புமனு - X
பகிர்:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பேரவைத் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இன்று(ஏப். 7) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

பெரும்பாலான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டாலும் ஒரு சிலரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, பல்வேறு காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வருகின்றன.

Advertisement

Advertisement

அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் இம்முறையும் தனது கோபி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கோபியில் செங்கோட்டையன் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு வருமான வரி செலுத்தவில்லை என்றும் உரிமம் முடிந்த நோட்டரி வழக்கறிஞர் அளித்த சான்றிதழ்களை ஏற்கக் கூடாது எனவும் அதிமுகவினர் புகார் அளித்த நிலையில் அவரது வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன் மாலை 5 மணிக்குள் செங்கோட்டையன் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

summary

Sengottaiyan Nomination Withheld in Gobichettipalayam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.