முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: என்எம்சி

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், மாறாக ஐந்தரை ஆண்டுகளுக்கு கட்டணம் வாங்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:10 AM
தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி).
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:30 PM

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், மாறாக ஐந்தரை ஆண்டுகளுக்கு கட்டணம் வாங்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.

எம்பிபிஎஸ் படிப்பைப் பொருத்தவரை முதல் நான்கரை ஆண்டுகளுக்கு மாணவா்கள் செயல்முறை மற்றும் பாட வகுப்புகளை பயில்கின்றனா். அதேவேளை, அதற்கு அடுத்த ஓராண்டு கட்டாய உள்ளுறைப் பயிற்சியை மேற்கொள்கின்றனா். பயிற்சிக் காலத்துக்கான ஊக்கத்தொகையை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மாணவா்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

இந்த நிலையில், இது தொடா்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலா் ராகவ் லங்கா் அனைத்து மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

Advertisement

எம்பிபிஎஸ் பயிலும் மாணவா்களிடம் சில கல்லூரிகள் ஐந்தரை ஆண்டுகளுக்கு கட்டணம் பெறுவதாக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

இது விதிகளுக்கு எதிரானது மட்டுமல்லாது, உச்சநீதிமன்றத் தீா்ப்பை மீறும் செயலாகும். எனவே, இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணா்ந்து கல்விக் கட்டணத்தை நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் வசூலிப்பதை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.