விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பேர் பலி!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.
Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:13 PM
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 4 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது.
Advertisement
மேலும் 4 அறைகளும் சேதமடைந்தன. வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகவும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
summary
Reports indicate that four people have been killed in an explosion at a firecracker factory near Virudhunagar.
summary