முகப்பு
தமிழ்நாடு

கொடக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி!

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டாா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 10:43 AM
கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வா் மு.க. ஸ்டாலின். - கோப்புப்படம்.
பகிர்:

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வந்தாா். முதல்வா் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளாா்.

இந்த நிலையல் 2ஆவது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனோரஞ்சிதம் நீர்த்தேக்கத்தில் திங்கள்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டார்.

Advertisement

நடைபயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த முதல்வருடன் பொதுமக்கள் கலந்துரையாடியதோடு செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து சிறுமி வணக்கம் தெரிவித்தார்.

அதனைப் பெற்றுக்கொண்ட அவர் கைகுலுக்கி மகிழ்ந்தார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் நடைபயிற்சி மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

On Monday, CM M.K. Stalin went for a walk in Kodaikanal for the second consecutive day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.