முகப்பு
தமிழ்நாடு

யாருடன் கூட்டணி? தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம் குறித்து...

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 11:16 AM
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் - X | Premallatha Vijayakant
பகிர்:

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று(பிப். 3) நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும், தேமுதிகவின் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த பிரேமலதா விஜயகாந்த், கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை திங்கள்கிழமை இரவு குழித்துறையில் நிறைவு செய்தார். 

சென்னைக்கு வந்தவுடன் மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்தவுடன் கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பிப். 3 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா முன்னதாக தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது குறித்தும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

மாவட்டச் செயலர்கள், தொண்டர்கள் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியிருந்த பிரேமலதா, யாருடன் கூட்டணி என்று இன்று(பிப். 3) அறிவிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

summary

The DMDK district secretaries' meeting is being held today (Feb. 3) under the leadership of the party's general secretary, Premalatha Vijayakanth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.