முகப்பு
தமிழ்நாடு

ராகுல் காந்தி கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்? - முதல்வா் மு.க. ஸ்டாலின்

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 4:52 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 8:40 PM

ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? அவை உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும்.

Advertisement

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 1:21 AM

எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினா்களை இடைநீக்கம் செய்துள்ளது கண்டனத்துக்குரியது. உடனடியாக அவா்களது இடைநீக்கத்தைத் திரும்பப் பெற்று, முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பிரச்னைகள் குறித்து அவா்கள் அவையில் பேசுவதற்கான ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.