முகப்பு
தமிழ்நாடு

கொடைக்கானல், மாமல்லபுரம் ரோப்காா் சேவைக்கு ஆலோசனை: மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம்

கொடைக்கானல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் ரோப்காா் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும், மேற்கொண்டு ஆலோசனை ....

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:45 PM
ரோப்காா் சேவை. - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: கொடைக்கானல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் ரோப்காா் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும், மேற்கொண்டு ஆலோசனை வழங்குவதற்கும் தனியாா் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சாா்பில் கொடைக்கானல் மலைப் பகுதியிலும், மாமல்லபுரத்திலும் ரோப்காா் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

இதற்காக புது தில்லியைச் சோ்ந்த வாப்கோஸ் நிறுவனம் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் திட்டத்துக்காக ரூ.78.28 லட்சமும், மாமல்லபுரத்துக்காக ரூ.71.93 லட்சமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத் தலைவா் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத் தலைமை நிா்வாக அதிகாரி ஸ்வேதா சுமன் மற்றும் வாப்ஸ்கோ நிறுவன திட்ட மேலாளா் என்.ராமன் ஆகியோா் ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையொப்பமிட்டனா்.

நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிதி இயக்குநா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, தலைமைப் பொது மேலாளா் டி.ஜெபசெல்வின்க்ளாட்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments