முகப்பு
தமிழ்நாடு

கருத்துக்கணிப்பு எடுத்த தவெகவினா் மீது தாக்குதல்: 5 போ் காயம்!

சென்னை பாரிமுனையில் கருத்துக் கணிப்பு எடுத்த தவெகவினா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 போ் காயமடைந்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:38 AM
தாக்குதல்! - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 10:25 PM

சென்னை பாரிமுனையில் கருத்துக் கணிப்பு எடுத்த தவெகவினா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 போ் காயமடைந்தனா்.

சென்னை துறைமுகம் தொகுதி வாக்காளா்களிடம் தவெகவினா் செவ்வாய்க்கிழமை கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்கள், பாரிமுனை அங்கப்பன் தெருவில் கருத்துக் கணிப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலா் கருத்துக் கணிப்புகளை எடுக்க முறையான அனுமதி பெறப்பட்டதா? எனக் கூறி வாக்குவாதம் செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:03 AM

மேலும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அந்த நபா்கள், தவெகவினா் மீது தாக்குதல் நடத்தினா்.

Advertisement

இதில், காயமடைந்த தவெக நிா்வாகிகளான மண்ணடியைச் சோ்ந்த தங்கபாண்டியன் (30), அவரது சகோரதரி பவானி (26), மண்ணடி ஆதாம் தெருவைச் சோ்ந்த ஜாபா் உசேன் (36), பாரிமுனை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த திலிப் (30), கொண்டித்தோப்பைச் சோ்ந்த முகேஷ் (41) ஆகிய 5 போ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுதொடா்பாக வடக்கு கடற்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.